சனத்தின் கோரிக்கைக்கு செவிசாய்ப்போம்- இலங்கை கிரிக்கெட் ரசிகர்களே தயாராகுங்கள்..!

கொழும்பில் நாளை (வெள்ளிக் கிழமை) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மஞ்சள் நிற ஆடைகளை அணியுமாறு இலங்கை சமூக ஊடகப் பயனாளிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் போது கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கு இலங்கையின் நன்றியை தெரிவிக்கும் வகையில் பல்வேறு சமூக ஊடக குழுக்களால் இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சனத் ஜெயசூர்யா மற்றும் பர்வீஸ் மஹரூப் ஆகியோரும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவுவதற்கும் தீர்மானித்த அவுஸ்திரேலிய அணியைப் பாராட்டுவது அவசியமானது என சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

YouTube தளத்துக்கு செல்லுங்கள் ?