சனத்  ஜெயசூரியாவின் சாதனையையும் நெருங்கிவிட்ட குயின்டன் டி காக்..!இந்தியாவுக்கு எதிராக அசத்தல்..!

சனத்  ஜெயசூரியாவின் சாதனையையும் நெருங்கிவிட்ட குயின்டன் டி காக்..!இந்தியாவுக்கு எதிராக அசத்தல்..!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம் பெற்று வருகிறது.

இந்த போட்டியின் 3-வது போட்டியில் சதமடித்த குயின்டன் டி கொக் தென்னாபிரிக்காவின் புதிய சாதனை ஒன்றை படைத்தார்.

குயின்டன் இன்று பெற்றுக் கொண்டது 17வது சதமாக அமையப்பெற்றுள்ளது, இதிலே இந்தியாவுக்கு எதிராக மட்டும் குயின்டன் டி கொக் மொத்தம் ஆறு சதங்களை விளாசி உள்ளமை கவனிக்கத்தக்கது.

இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சனத் ஜயசூரியவின் சாதனையை நெருங்கி விடும் நிலையில் டி கொக் இருக்கிறார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி வீரருமான சனத் ஜெயசூரிய இந்தியாவுக்கு எதிராக 7 சதங்களை விளாசியுள்ளார்.

குயின்டன் டி காக், குமார் சங்ககார, ரிக்கி பாண்டிங் ஆகிய வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக 6 சதங்கள் விளாசி உள்ளமை கவனிக்கத்தக்கது.

இதன் மூலமாக விரைவில் குயின்டன் டி காக் ,சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குயின்டன் டிகாக் தனது 17வது ஒருநாள் சதத்தை இன்று பதிவு செய்தார்.

இந்தியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள்…

01) சனத் ஜயசூரிய – 07 சதங்கள்

02) குயின்டன் டிகாக் – 06 சதங்கள்

03) குமார் சங்கக்கார – 06 சதங்கள்

04) ரிக்கி பாண்டிங் – 06 சதங்கள்

05) ஏபி டி வில்லியர்ஸ் – 06 சதங்கள்

இதேநேரம் விக்கட் காப்பாளராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையிலும் குயின்டன் டீ கொக் 2 வது இடத்தில் காணப்படுகின்றார்.