சனத் ஜெயசூர்யாவின் சாகச பிடியெடுப்பு- வீடியோ இணைப்பு..!
முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடரின் நேற்று(26) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய பங்கேற்றிருந்தார்.
ஆசிய ஜியன்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்றிருந்த 52 வயதான சனத் ஜெயசூரிய , நேற்றைய போட்டியில் பிடித்த அபரிவிதமான பிடியெடுப்பு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வேர்ல்ட் ஜியன்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கிப்ஸ் அடித்த பந்தை டைவ் அடித்து சனத் கேட்ச் ஆக்கினார்.வயதானாலும் உன் ஸ்டையிலும், டைவ்வும் மாறவேயில்லைப்பா என ரசிகர்கள் சனத்தை பாராட்டி வருகின்றனர்.
வீடியோ இணைப்பு.
Sanath Jayasuriya ❤️? pic.twitter.com/D8J5M9WSRY
— Stay Cricket (@staycricket) January 26, 2022