சனத் ஜெயசூரியவை தேடிச்சென்றுள்ள புதிய பதவி…!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூர்யாவுக்கு புதிய பதவி கிடைத்துள்ளது. இதன்படி, முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய இலங்கை சுற்றுலாத்துறையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவை நியமிப்பதற்கான விசேட வைபவம் நாளை நடைபெறவுள்ளது. சனத் ஜெயசூர்யா மிகவும் திறமையானவர் என்பதோடு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர்.

குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் தானாக முன்வந்து பங்கேற்க சனத் ஜயசூரிய விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐம்பத்து மூன்று வயதான சனத் ஜெயசூர்யா இலங்கைக்காக 6793 டெஸ்ட் ரன்களும், 13430 ஒருநாள் ரன்களும், 629 டி20 ரன்களும் எடுத்துள்ளார்.

சனத் ஜயசூரிய தனது புதிய பதவியின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதன் மூலம் இலங்கைக்கு சிறந்த சேவையாற்ற முடியும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.