சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அங்கம் வகிக்கும் தமிழக வீரர் ஒருவருக்கு கொரோனா- போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்..!
இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்றன, முதல் கட்டப் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்றபோது அங்கே கொரோனா தொற்றுடன் ஒரு சில வீரர்கள் அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போட்டிகள் ஒத்திதவைக்கபட்டிருந்தன.
இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகி இப்போது 3 ஆட்டங்கள் நிறைவுக்கு வந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான வீரரான நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இதனால் அவரோடு நேரடித் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
நடராஜனுக்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.