சன் ரைசேர்ஸ் ஹெதரபாத் அணித் தலைமையில் தசுன் ஷானக….!

கிரிக்கெட் உலகின் அதிக வர்த்தக மதிப்பு கொண்ட பிரீமியர் லீக் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கின் 2023ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தை டிசம்பர் 16ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்தியாவின் பிரபல விளையாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக அதிக வாய்ப்புள்ள வீரர்களில் இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கேப்டன் தசுன் ஷானக்கவின் பெயரை சேர்த்துள்ளனர்.

இங்கு பல இளம் வீரர்களுடன் கிரிக்கெட் களத்தில் புரட்சியை ஏற்படுத்தி இலங்கை அணியை ஆசிய கிண்ண வெற்றிக்கு தசுன் ஷானக வழியமைத்ததாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தப் பட்டியலில் தசுன் ஷானக உள்ளிட்ட 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர், ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து கேன் வில்லியம்சன் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையின்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வழிநடத்தும் வீரர்களாக தசுன் ஷானக, ஜேசன் ஹோல்டர், மயங்க் அகர்வால், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது பெயரை வெளியிட்டுள்ளது .