சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடைபெற்றார் டேவிட் வோர்னர்..!

இனிமே ஐதராபாத் அணிக்கு விளையாட மாட்டேன்… : டேவிட் வார்னர்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் தன்னை இனி அணியில் பார்க்க முடியாது என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் தொடக்கத்தில் இருந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட டேவிட் வார்னர், அணியை கோப்பையை உச்சி நுகர செய்தார்.

ஆனால் கடந்த சில சீசன்களாக அவருக்கும் ஐதராபாத் அணி நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்பட்டு வருகிறார்.

மேலும் இவருக்கு அணியில் இடம் இன்றி போட்டிகளில் இருந்தும் ஓரம்கட்டப்படு வருகிறார்.

இந்நிலையில் நேற்றை போட்டியில் அவரை காணாத ரசிகர் ஒருவர் வருத்ததுடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த டேவிட் வார்னர், இனிமேல் என்னை பார்க்க முடியாமல் கூட போகலாம் என்றும் ஆனால் தொடர்ந்து அணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சோகத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

விளையாட்டு.com தளத்தின் YouTube பக்கமும் நீங்கள் பிரவேசிக்கலாம்.

?????

இதற்கிடையில் சமீபத்தில் பயிற்சியாளர் அளித்த சமீபத்திய பேட்டியில் அடுத்துவரும் போட்டிகளில் வார்னர் பார்வையாளரகவே தொடர்ந்து, இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#ABDH