சப்பாத்து வாங்கித் தாருங்கள்- சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்த ஜிம்பாப்வே கிரிக்கட் வீரர்,ஏற்றுக்கொண்ட பிரபல காலணி தயாரிக்கும் நிறுவனம்..!

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ரியன் பேர்ள், சமூக வலைத்தளத்தில் சப்பாத்து வாங்கித் தாருங்கள் கோரிக்கையை விடுத்திருந்தார்.

சிம்பாப்வே கிரிக்கெட் அணி நிதி நிலைமையில் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்களது கிரிக்கட் வீர்ர்கள் தமக்கான காலணியை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர் கொள்வதாகவும், ஒரு தொடர் முடிந்ததும் அந்த தொடரில் பயன்படுத்திய காலணியையே அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும், பயன்படுத்தக்கூடிய நிலை இல்லாவிட்டாலும் அதனை Glue கொண்டு ஒட்டி பயன்படுத்திக் கொண்டு வருவதாகவும் ரியன் பேர்ள் கவலையான விடயத்தை பகிர்ந்திருந்தார்.

 

இதனடிப்படையில் தங்களுக்கு காலணியை வழங்குவதற்கு யாராவது அனுசரணை வழங்க முடியுமா என்கிற கோரிக்கையும் சமூக வலைத்தளத்தின் மூலமாக அண்மையில் சிம்பாப்வே சகலதுறை வீரர் ரியன் பேர்ள் கோரிக்கை விடுத்திருந்தார்.

சமூக வலைத்தளத்தில் இவருடைய கோரிக்கை வைரலாகி இருந்த நிலையில், அதனைப் பார்த்து பிரபல காலணி தயாரிக்கும் நிறுவனமான பூமா சிம்பாப்வே வீரர்களுக்கு காலணி வழங்குவதற்கான அனுசரணை வழங்க தயாராக இருப்பதாகவும் கவலைப்படவேண்டாம் என்கின்ற ஒரு விடயத்தையும் பூமா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னுடைய கோரிக்கையை விட, அது வைரலாகி ஏற்றுக்கொள்ளப்பட்டு இப்போது சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு காலணிகள் வழங்குவதற்கான அனுசரணை வழங்க குறித்த நிறுவனம் தயாராகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கட் ஆடினாலும்கூட, காலணி வாங்குவதற்கே கஷ்டப்படும் நிலையில் சிம்பாப்வே கிரிக்கெட் நிலைமை இருக்கிறது என்பதுதான் ரசிகர்களை பொறுத்தவரை மனவேதனைக்குரிய விடையமாகும், இருப்பினும் பூமா நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை பகிரலாம்.