Vass
சில சமயம் வேகப்பந்து வீச்சாளர்களை விட மித வேகப்பந்து விச்சாளர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
150 km வேகத்தில் வர பந்தை கூட ஈசியா ஆடிரலாம் 130 -135 km வேகத்தில் வரும் லைன் அண்ட் லெங்த் பந்தை ஆடுவதில் மிகவும் சிரமம் இருக்கும்.
மெக்ராத் , வாசிம் அக்ரம், வால்ஷ், பொல்லாக் எல்லாம் அந்த கேட்டகிரி. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மித வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள் அவர்கள் விக்கெட்களை மலை கற்களாக குவித்து விடுவார்கள் அப்படி குவித்தவர்களில் ஒருவர் ஸ்ரீலங்காவின் சமிந்தா வாஸ் .
பாக்க அபாயகரமில்லாத பவுலர் மாதிரி தான் தெரிவார் ஆனால் அவரோட லேட் ஸ்விங்கால் எப்பேர்பட்ட ஜாம்பாவான்களையும் அசால்ட்டாக காலி பண்ணி விடுவார். சச்சின் , கங்குலி ,சயித் அன்வர், கெயில், கீப்ஸ் என்று பட்டியல்கள் நீளம்.
2001ம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் ஸ்ரீலங்கா வந்தபோது ஒரே தொடரில் 26 விக்கெட்கள் எடுத்தது அதில் ஒரே போட்டியில் 14 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்ததது.
2001ல் ஜிம்பாவே கூட 8 விக்கெட்டு எடுத்து 38 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது
2003ம் ஆண்டு உலககோப்பை போட்டியில் leading wicket taker ஆக 23 விக்கெட்டுகள் எடுத்தது .
ஒன்டே போட்டியில் 400 விக்கெட்டுகள் எடுத்து 4வது பவுலர் என்ற பெருமையை பெற்றது என வாஸ் பண்ணிய சாதனைகள் ஏராளம்.
டேனியல் வெட்டோரி ?
ஆசியா நாடுகளில் இல்லாமல் வேற நாடுகளில் நல்ல ஸ்பின்னர்கள் உருவானால் அவர்களை கொண்டாட வேண்டும். அத்தி பூ போல் அதிசியமாக பூப்பவர்கள் அவர்கள் .
அவர்கள் மைதானத்தில் ஸ்பின்க்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையிலும் அதை எதிர்கொண்டு தடையை தகர்த்து வருவது போல வருவார்கள் அதானால் தான் வார்னே ஸ்பின் கீங் என்று கொண்டாடப்படுகிறார். அவர் வரிசையில் மற்றுமொரு ஸ்பின்னர் டேனியல் வெட்டோரி.
பாக்க பால்வடியும் முகம் மிகவும் சாதுவாக விளையாட்டை எதிர்கொள்ளும் திறமை, சலைக்காமால் ஒடி வந்து போடும் இடது கை சுழற்பந்து வீச்சு திறமை இது தான் வெட்டோரி.
Harry potter இது தான் ரசிகர்கள் இவர்க்கு வைத்த செல்லபெயர்.
ஸ்டிபன் பிளம்மிங்ன் Go to bowler இந்த வெட்டோரி எப்போதும் எல்லாம் விக்கெட்டுகள் தேவையோ அப்போது எல்லாம் கை கொடுப்பார்.
11வது வீரராக களம் இறங்கியவர் தன்னை ஆல்ரவுண்டராக செம்மைபடுத்தி லோயர் ஆர்டரில் ஸ்கோர் செய்யும் பேட்ஸ்மேனாக உயர்ந்தார். டெஸ்ட்டில் 6 சதங்கள் அடித்து 4500 ரன்களை குவித்துள்ளார்.
362 விக்கெட்டுகளை எடுத்தவர் அடுத்தடுத்து வந்த காயத்தால் ஒய்வை அறிவித்தார். தொடர்ந்து விளையாண்டு இருந்தால் கபில்தேவ் ரிச்சர்ட் ஹார்ட்லி செய்த 400 விக்கெட்டுகள் 4000 ரன்கள் என்ற சாதனையை படைத்திருக்கலாம்.
2015 உலககோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்து அசத்திருப்பார்.
வாஸ் 755 விக்கெட்டுகள் எடுத்தவர்
வெட்டோரி 705 விக்கெட்டுகள் எடுத்தவர்.
Backbone of Srilanka and Newzland cricket.
இருவருக்கும் மாற்று வீரர் இன்றுவரை இரு டீம்க்கும் கிடைக்கவில்லை.
சமிந்தா வாஸ், வெட்டோரி இருவரும் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
#அய்யப்பன்