சமிந்த வாஸ் ❤️

ஒரு சில குறிப்பிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே ஒரு Discipline இருக்கும் அதாவது என்னதான் மற்றைய பந்துவீச்சாளர்களுக்கெல்லாம் எதிரணி துடுப்பாட்ட வீரர்கள் போட்டு வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தாலும் இந்த பந்துவீச்சாளர்களுக்கு Economy rate அதிகபட்சம் 5 தான் இருக்கும், அதற்கு அவர்களிடம் பந்துவீச்சு line & length இல் ஒரு சீரான நேர்த்தி இருக்கும், இலகுவாக maiden ஓவர்களை எடுக்கும் வித்தை தெரிந்து வைத்திருப்பார்கள். அதில் மிகவும் நேர்த்தியானவர் என்றால் சமிந்த வாஸ் என்பேன் காரணம் அந்த Discipline உடன் சேர்த்து அந்த Bowling action அவளவு நேர்த்தியாக இருக்கும்.

2000 களின் ஆரம்பத்தில் கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவர்களுக்கு நன்றாகத்தெரியும் வாஸின் அந்த aimed to the stumps deliveries.
கிளென் மெக்ராத், வசீம் அக்ரம்னு எல்லா பெரிய பட்ஜெட் போலர்ஸையும் சச்சின் டென்டுல்கர் போட்டு வெளுத்துட்டு இருக்க மற்ற பக்கம் விக்கெட்டை நோக்கியே பந்து வருதுனு பாத்துட்டு டென்ஷனாகி Bat அ நைசா தூக்கி pad ஐயும் ஸ்டம்ப்பையும் கவர் பண்ணி ஒரு defence குடுக்கப் போனா பந்து அப்பிடியே நேரா வந்து பேட்ஸ்மேன கடக்கிற இடத்தில மெதுவா ஒரு ஸ்விங்… ஸ்லிப்ல நிக்கிற பீல்டர் கைகளுக்குள்ள பந்து போக பெவிலியன் நோக்கி சச்சின் நடந்து போற சீன்…

சில நேரங்களில் out side the off stumps க்கு தான் பந்து வருதுனு Bat அ நைசா ஓஃப்ல தூக்கி அடிக்க ரெடியாகினா ஓஃப்ல வந்துட்டு இருந்த பந்து திடீர்னு உள்ள திரும்பி pad ஐ தடவ கீழ குனிந்த தலையை மேல தூக்கி அம்பயர பாக்க அவர் நடுவிரல தூக்கி வெளிய போனு காட்ற மாதிரியே இருக்கும்… இப்பிடி இந்திய விசிறகளுக்கு ஏகப்பட்ட கசப்பான அனுபவங்களை கொடுத்த வேகப்கந்து வீச்சாளர் என்றால் அது வாஸ் தான்.

2004 ஆம் ஆண்டு ஆஸி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தபோது 2வது ஒருநாள் சர்வதேசப்போட்டி தம்புள்ளையில் நடைபெற்றது அந்தப்போட்டியை நேரில் சென்று பார்த்ததால் இன்றும் மறக்கமுடியாத ஒரு போட்டி. இலங்கை அணி ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கியிருந்தது, கடைசி ஓவரில் ஆஸி வெற்றி பெற 8 ஓட்டங்களே தேவைப்பட்டது கைவசம் 5 விக்கெட்டுக்கள் மீதமிருக்க. களத்தில் நின்றது மிகப்பெரிய hitters & finishers என்று வர்ணிக்கப்படும் அன்ரூ சைமன்ட்ஸ் மற்றும் மைக்கல் பெவன். தலைவர் மார்வன் அத்தப்பத்து அந்த ஓவரை வாஸ்’க்கு என்றே ரிஸர்வ் செய்து வைத்திருந்தார். அந்த 8 ஓட்டங்களைப்பெற முடியாமல் ஒரு ஓட்டத்தினால் ஆஸி தோல்வியடைந்தது. அத்தனையும் full & straight deliveries ?மைதானமே அதிர்ந்தது.

இலங்கையில் வேகப்பந்து வீச்சுக்கு பலருக்கும் Role model & inspiration ஆஹ் இருந்த ஒரு அற்புதமான பந்துவீச்சாளர்…தனிப்பட்ட முறையில் எனக்கு இலங்கை அணியிலேயே மிகவும் பிடித்தமான வீரர்… அந்தக்காலத்தில் social media எல்லாம் இருந்திருந்தால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருந்திருக்க வேண்டிய Legend.

-Happy Birthday #Chaminda_Vaas

#Sujeevan Thirumaran