சமூக ஊடகத்திலும் புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி…!

விராட் கோலி சமூக ஊடகங்களில் ஒன்றான ட்விட்டரில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் மற்றும் இரண்டாவது ஆசியர் எனும் சாதனை புரிந்தார்.

அவர் சமீபத்தில் ஆசிய கோப்பை 2022 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் முகமது ரிஸ்வானுக்குப் பிறகு போட்டியின் இரண்டாவது அதிக ரன் எடுத்தவர் எனும் சாதனை புரிந்தார்.

ஆசியக் கோப்பையில் இரண்டு அரைசதங்களுடன் சதம் அடித்த ஒரே வீரர் கோஹ்லிதான். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 61 பந்தில் அவர் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தது, T20 வடிவத்தில் அவரது முதல் சதமாக அமைந்தது.

முன்னதாக, 33 வயதான அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தில் சென்று கொண்டிருந்ததால் மனச் சோர்விலிருந்து மீள அவருக்கு நீண்ட இடைவெளி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், ஆசியாவின் நட்சத்திர வீரர் கோலியைவிட இந்தியப் பிரதமர் மட்டுமே டுவிட்டரில் அதிக followers உடன் முன்னிலையில் உள்ளார். நரேந்திர மோடியை ட்விட்டரில் 82.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைவர் விராட் கோலி Twitter இல் 50 மில்லியன் followers பெற்று புதிய சாதனை புரிந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?