சமையல் கலைஞர்களுக்கு பிசிசிஐ தடை.. உணவை டெலிவரி மூலம் தனியாக வாங்கிய விராட் கோலி
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது அடுத்து பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் முக்கிய கட்டுப்பாடுகள் வீரர்கள் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தினருடன் அதிக நாட்கள் செலவிடக்கூடாது.
அதிக உடைமைகளை வீரர்கள் எடுத்து வரக்கூடாது மற்றும் உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பல விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.இந்த சூழலில் விராட் கோலி எப்போதுமே உடல் தகுதியில் தீவிரமாக இருப்பார்.
உணவு எடுத்துக் கொள்வதில், அதிக கவனம் செலுத்துவார். பொதுவாக வீரர்கள் தங்கும் ஹோட்டலில் இந்திய வீரர்களுக்கு என உணவு கலைஞர்கள் இருப்பார்கள். இல்லையெனில் ஹோட்டலில் இருக்கும் உணவு கலைஞர்கள் தயாரித்து பிரத்தியேக உணவுகளை இந்திய அணியினருக்கு வழங்குவார்கள்.
ஆனால் விராட் கோலி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வந்து தங்க வைத்திருந்தார்கள். தற்போது இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து தமக்கு எந்த மாதிரி உணவு வேண்டும் என்பதை விராட் கோலி துபாயில் உள்ள பிரபல ஹோட்டலை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.
இதனை அடுத்து அந்த ஹோட்டல் சமையல் கலைஞர்கள் விராட் கோலிக்கு என தனி உணவுகளை சமைத்து அவருக்கு டெலிவரி செய்து இருக்கிறார்கள். இதனால் விராட் கோலி பயிற்சிக்கு வரும்போது கூடவே உணவு பொட்டணங்களையும் எடுத்து வந்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பயிற்சிக்கு பிறகு விராட் கோலி தனது உணவை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்.
உணவுக் கலைஞர்களுக்கு பிசிசிஐ தடை விதித்ததை அடுத்து விராட் கோலி இந்த முறையில் பின்பற்றுகிறார். பயிற்சியின்போது விராட் கோலியின் ரோகித் சர்மாவும் ஆர்ஸ்தீப் மற்றும் முஹம்மது சமி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வலை பயிற்சிகள் எதிர்கொண்டு இருக்கிறார்கள். இதில் விராட் கோலி பிலிக் ஷாட்களை ஆடி பயிற்சி செய்து இருக்கிறார். இதேபோன்று ரோகித் சர்மா இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் வீசும் யாக்கர்களை எதிர்கொள்வது குறித்து தனி பயிற்சி ஈடுபட்டு இருந்திருக்கிறார்.