சம்பளமே வேண்டாம் ஆனால் விளையாட வருகின்றோம் -இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடி முடிவு …!

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தம் இழுபறியில் இருக்கும் நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஓர் தடாலடியான முடிவை எடுத்துள்ளனர்.

வீரர்களின் சம்பளம் 40 சதவீதத்தால் குறைக்கபட்டுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமது புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மறுத்து வருகின்றனர்.

ஆனாலும்கூட ஸ்ரீலங்கா கிரிக்கெட் குழுவின் (Srilanka Cricket committe) தலைவர் அரவிந்த் ஆலோசனைப்படி வீரர்கள் வங்கதேச தொடருக்கான ஒப்பந்தத்தில் மட்டும் கைச்சாத்திட்டு விளையாடி வந்தனர்.

வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான கால எல்லை ஜூன் மாதம் மூன்றாம் திகதி நிறைவுக்கு வந்தாலும், இன்னும் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்படவில்லை ,இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு செல்வதற்கு முன்னர் தாங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டோம் என்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் சம்பளமே வேண்டாம் விளையாடி தருகிறோம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடாலடியான முடிவெடுத்துள்ளமை இன்னும் இந்த நிலைமையை சிக்கலுக்குள் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் வீரர்களின் தராதர அடிப்படையில் 40 சதவீத சம்பளம் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.