சம்பினாகியது ஏறாவூர் லக்கி ஸ்டார் அணி?

சம்பினாகியது ஏறாவூர் லக்கி ஸ்டார் அணி?

இன்று இடம்பெற்ற காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் விலகல் முறையிலான சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் காத்தான்குடி பதுறியா அணியினை எதிர்த்து ஏறாவூர் லக்கி ஸ்டார் அணி மோதிக்கொண்டது.

பாலமுனை முஹைதீன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் 2:0 எனும் கோல் கணக்கில்
பதுறியா அணி முன்னிலை வகித்தது.

எனினும் போட்டியின் நிறைவில் இரு அணிகளும் தலா 3 கோல்களினை பெற்றுக்கொள்ள 3:3 எனும் கோல் கணக்கில் போட்டி நிறைவுக்கு வந்ததுடன் பெனால்டி அடிப்படையில் லக்கி ஸ்டார் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

பதுறியா அணி ஆரம்பத்தில் போட்டியினை தன்வசம் வைத்திருந்தாலும் இறுதியில் லக்கி ஸ்டார் அணியின் சிறப்பான ஆட்டத்தின் மூலமாக தோல்வினை தழுவி இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.

போட்டியில் பதுறியா அணிக்கான மூன்று கோல்களையும் முன்கள இளம் வீரர் #ரிபாய் அடித்து அசத்தலான ஹெட்ரிக் ஒன்றினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

#Congratulations ??

#Yasmeen