சர்ச்சைகள் நிறைந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் இலகு வெற்றி ..!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது .
சர்ச்சைகள் நிறைந்த இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
ஆரம்ப வீரர்கள்
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆரம்ப விக்கட்டில் அபாரமான 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் , களத்தடுப்பாட்ட வீரருக்கு இடையூறு வழங்கினார் என்று கிரிக்கெட் விதி முறையின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதன் முறையாக தனுஷுக்க குணதிலக்க களத்தடுப்புக்கு இடையூறு வழங்கிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட 105 பெற்ற நிலையில் முதல் விக்கட் வீழ்த்தப்ப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் மத்திய வரிசை வீர்ர்கள் சொதப்பிய நிலையில் 236 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.
அறிமுக வீரர் அசேன் பண்டார அரைசதம் அடித்தார் . அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த ஐந்தாவது இலங்கையர் எனும் பெருமையையும் அசேன் பண்டார பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு 237 எனும் இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் துடுப்பாடி 47 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
சாய் ஹோப் சதமடித்தமை குறிப்பிடத்தக்கது ,10 ஓவர்களில் இருபத்து ஆறு ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஹசரங்க மிக சிக்கனமாக பந்துவீசினார் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது .
சர்ச்சைகள் நிறைந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது .
ஆட்டநாயகன் விருதுக்கு ஹோப் தேர்வானார்.