சர்ச்சைக்குரிய ‘நோ போல்’ – அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான உலக சாதனை வெற்றியை தடுத்து நிறுத்த தவறிந இந்தியா ..!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணிக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டியில் இலகுவான வெற்றியை பெற்று தொடரில் முன்னிலை பெற்ற ஆஸி, இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் மிகச்சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சு வீராங்கனையான கோஸ்வாமியின் இறுதி ஓவரில் ஆஸியின் வெற்றிக்கு13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
விறுவிறுப்பை ஏற்படுத்திய போட்டியின் இறுதிப் பந்தில் 3 ஓட்டங்கள் திறமையாக இருந்தது, கோஸ்வாமி வீசிய பந்து சர்ச்சைக்குரிய நோ போலாக அறிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து இறுதியில் ஆஸியின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட அவுஸ்திரேலியா இலக்கை பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 274 ஓட்டங்களை பெற்றது, ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றமை கவனிக்கத்தக்கது.
ஒரு கட்டத்தில் 96 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் மூனியின் அற்புதமான சதம் ஆஸ்திரேலியாவை காப்பாற்றியதுடன் அவர்களின் தொடர்ச்சியான 26 வது ஒருநாள் வெற்றியாக பதிவானதோடு அவர்கள் உலக சாதனையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இறுதி ஓவர் வீடியோ..???
THE STREAK LIVES ON #AUSvIND pic.twitter.com/pj744Pc4Dz
— cricket.com.au (@cricketcomau) September 24, 2021