சர்வதேச ஒன்றிய யோகா சம்மேளனத்தின் தொழில்நுட்பக்க குழுவின் பணிப்பாளராக திருமலை மைந்தன் கௌரிதாசன் நியமனம்…!

சர்வதேச ஒன்றிய யோகா சம்மேளனத்தின் தொழில்நுட்பக்க குழுவின் பணிப்பாளராக திருமலை மைந்தன் கௌரிதாசன் நியமனம்…!

சர்வதேச ஒன்றிய யோகா சம்மேளனத்தின் தொழில்நுட்பக்க குழுவின் பணிப்பாளராக திருக்கோணமலை மண்ணின் மைந்தனும் பிரபல கராத்தே ஆசானுமாகிய கௌரிதாசன் நியமனம் பெற்றுள்ளார்.

சர்வதேச ஒன்றிய யோகா சம்மேளனம் (International Union Yoga Federation) பணிப்பாளர்களாக அண்மையில் இரு இலங்கையர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாணிக்கவாசகம் ரத்னாஜோதி மற்றும் கௌரிதாசன் ஆகியோரே குறித்த பதவிகளில் நியமிக்கப்பட்ட இரு இலங்கையராவர்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வாழ்ந்தாலும் தமிழ் பற்றோடு சேவைபுரியும் பிரபல கராத்தே ஆசானான கௌரிதாசன் ஏராளமான சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.

கலை, கலாசாரம் மட்டுமல்லாது விளையாட்டிலும் அதீத ஆற்றலை வெளிப்படுத்தும் கௌரிதாசன், ஈழத்தில் வாழும் மக்களுக்கான சமூக சேவைப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து செயலாற்றுபவர்.

திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் முன்னாள் மாணவராகவும், பாண்ட் வாத்திய குழு, சாரணியக் குழு உள்ளிட்ட ஏராளமானவற்றில் பல்துறை சாதனையாளனாக மிளிர்ந்த கௌரிதாசனை தேடி இன்னுமொரு கௌரவம் கிடைத்துள்ளமை இலங்கை தமிழர்கள் எல்லோருக்கும் பெருமையான விடையம் எனலாம்.