சர்வதேச கிரிக்கெட்டில் புதுவித செலிபிரேஷன்- கெவின் சின்கிளயார் ..!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கெதிரான T20 தொடரில் அறிமுகமான கயானாவின் 21 வயதான கெவின் சின்கிளயார் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு புதுவித செலிபிரேஷனை வெளிக்காட்டினார்.

இலங்கையின் ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக்கவின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் ஜிம்னாஸ்டிக் வீரர்கள் போன்று துள்ளிக் குதித்து சாகசம் புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளின் ஷெல்டன் காட்ரெல் இராணுவ சலூட் போடுவது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவது ரசிகர்களால் ரசிக்கப்படும் நிலையில், இப்போது கெவின் சின்கிளயார் அவரது புதுவித செலிபிரஷன் மூலம் கிரிக்கெட்டில் கால்பதித்துள்ளார்.

வீடியோ இணைப்பு.