- அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த, சர்வதேச கிரிக்கெட் நடுவரான புறூஸ் ஒக்சின்பேட் தனது 15 வருட கால சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
2006 இல் சர்வதேச நடுவராக பணிபுரிய ஆரம்பித்த புறூஸ் இதுவரை 63 டெஸ்ட் போட்டிகள், 106 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 இருபதுக்கு-இருபதுசர்வதேசப் போட்டிகளில் நடுவராக கடமையாற்றியுள்ளார்.
இவர் இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் பிரிஸ்பேன் மோதிய நான்காவது போட்டியே, இவர் சர்வதேச நடுவராக கடமையாற்றிய இறுதிப் போட்டியாகும்