சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்

இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு 2011 கால பகுதிகளில் டில்ஷான் உடன் இணைந்து சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட தரங்க ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 15 சதங்கள் அடங்கலாக 6951 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் அடங்கலாக 1754 ஓட்டங்களையும் T20 போட்டிகளில் 407 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

உபுல் தரங்க இறுதியாக இலங்கை அணிக்கு 2019 ஆம் ஆண்டில் விளையாடி இருந்தார்.