சல்லி அம்பாள் பாடசாலை மாணவி பிரதீஷா சாதனை…!

விளையாட்டு அமைச்சினால் நடத்தப்படும் விளையாட்டு விழாவின் திருமலை மாவட்ட மட்ட போட்டியில் தி/சல்லி அம்பாள் பாடசாலை மாணவி பிரதீஷா சாதனை படைத்துள்ளார்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை சார்பாக பங்கு கொண்ட பிரதீஷா 100m, 200m, 400m நிகழ்ச்சிகள் முதலாம் இடத்தை பெற்று பெண்களுக்கான சுவட்டு போட்டியின் வெற்றி வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தமாத இறுதியில் நடைபெறும் மாகாண மட்ட போட்டியிலும் பிரதீஷா பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Previous articleதிருமலை, சல்லி மாணவன் சாதனை..!
Next articleசஞ்சய் பங்கரை மணந்த ஜஸ்பிரிட் பூம்ரா.. (மீம்ஸ்)…!