சவுத்தாம்டனை அடைந்தது இந்திய அணி (புகைப்படங்கள் இணைப்பு)

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதி போட்டியில் விளையாடுவதற்காக கோஹ்லி தலைமையிலான அணி சற்றுமுன்னர் இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரை சென்றடைந்துள்ளது.

18 ம் திகதி இடம்பெறவுள்ள மாபெரும் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சந்திக்கவுள்ளது.

இன்றிலிருந்து 10 நாட்கள் வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்களது டுவிட்டர் தளத்தில் வீரர்கள் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.