சவ்ரவ் கங்குலிக்கே சவால் விடும் ஒலிம்பிக் கொண்டாட்டம்- நீச்சல் பயிற்சியாளரின் வெறித்தனம் ..! (வீடியோ இணைப்பு)

சவ்ரவ் கங்குலிக்கே சவால் விடும் ஒலிம்பிக் கொண்டாட்டம்- நீச்சல் பயிற்சியாளரின் வெறித்தனம் ..! (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய BCCI தலைவருமான சவ்ரவ் கங்குலி லோர்ட்ஸ் மைதானத்தில் தனது சீருடையை கழற்றி சேட்டை செய்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதற்கு சவால்விடும் கொண்டாட்டம் ஒன்று ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இடம்பெற்றுள்ளது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் அரியார்ன் டிட்மஸ் தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய நீச்சல் பயிற்சியாளர் டென் பாக்ஸால் அடுத்த நிலை கொண்டாட்டங்களுக்கு சென்று ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

பெரும்பாலானவர்கள் கொண்டாட்டத்தை லேசாக எடுத்துக் கொண்டாலும், ஒரு சிலர் அவரது கொண்டாட்டத்தின் தன்மையைக் எதிர்க்கவில்லை. பெண்களின் 400 M ஃப்ரீஸ்டைலின் இறுதிப் போட்டியில் 20 வயதான டிட்மஸ் அமெரிக்க நட்சத்திரம் கேட்டி லெடெக்கியை வீழ்த்தியதும், அவரது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதும், ஒலிம்பிக்கில் ஒரு தனிப்பட்ட நிகழ்வில் முதல்முறையாக அவரைத் தோற்கடித்ததும் இந்த கொண்டாட்டத்தின் காரணமாகும்.

 

 

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி, காட்டுத்தீயை விட வேகமாக பரவி வருகிறது.

அவரது காட்டு கொண்டாட்டங்களை இங்கே பாருங்கள்: