சஹாலை நகலெடுத்த ஹசரங்க – மீண்டும் Purple cap ?…!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை வெளியேற்றியதன் மூலம் வனிந்து ஹசரங்க ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2022 பதிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேவேளை, போட்டியின் 67வது போட்டியாக வனிந்து ஹசரங்க விளையாடும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியாக இடம்பெற்றது.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மீண்டும் ஒருமுறை பர்பிள் தொப்பியை அணிந்து, போட்டியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரானார்.

முன்னாள் ஆர்சிபி வீரரான சஹாலும் 24 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார், இந்த நிலையில் ஹசரங்கவும் 24 விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது . குறித்த போட்டியில் RCB 8 பந்துகள் மீதமிருக்க 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சஹாலின் ஸ்டைலிலேயே 24 ஆவது விக்கெட்டை கைப்பற்றிய பின்னர் மைதானத்தில் வணிந்து ஹசரங்க வித்தியாசமான போஸ் கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .

அந்தப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது ?

இந்த ஐபிஎல் 2022ல் வனிந்து ஹசரங்க:-

4-0-40-1
4-0-20-4
4-0-32-1
4-0-28-2
4-0-35-2
4-0-40-1
2-0-20-0
1-0-7-0
4-0-23-2
4-0-28-2
3-0-31-1
4-1-18-5
4-0-15-2
4-0-28-1

??

YouTube Link ?