சாதனைத் தமிழன் அஷ்வின்- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நிகழ்த்திய உலகமகா சாதனை..!
சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நிறைவுக்கு வந்திருக்கிறது
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவிக் கொண்டது, நியூசிலாந்து அணி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மகுடத்தை தனதாக்கிக் கொண்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் ஒரு உலக சாதனையை படைத்திருக்கிறார் .
இந்தத் தொடரில் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனை அவுஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் வசம் காணப்பட்டது.
அந்த சாதனையை இறுதிப்போட்டியில் அஸ்வின் கைப்பற்றிய விக்கெட்டுகள் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிகமான 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் உலக சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
All 71 wickets of @ashwinravi99 in #WTC pic.twitter.com/ByejntmDYx
— Chaitanya Varma (@_chaituvarma_18) June 25, 2021
தமிழன் என்று சொன்னாலே என்னாளும் திமிரேறேறுமே .