சாதனையாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்.

சாதனையாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்.

பல காலங்களாக பல கோப்பைகளை இலகுவாக வென்று விடக்கூடியவாறே அணியின் கட்டமைப்பே காணப்பட்டது. அதற்க்கு அர்ஜுனா எனும் மகத்தானா தலைவன் இட்ட அடித்தளமே. அதன்பின் அவர் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டோர் அதனை மேலும் உறுதிப்படுத்தினர் 2014 காலம் வரை 2 உலகக்கிண்ணங்கள், 5ஆசிய கிண்ணங்கள் கைவசம் இருந்தது அணியிடம். அதிலும் அதிக தடவைகள் இறுதிப்போட்டிற்கு சென்றிருகின்றது. இதன் காரணமாகவே அன்றிலிருந்து இன்று வரை அர்ஜுனா, சனத், அரவிந்த, வாஸ், முரளி, டில்சான், சங்கா, மகேல, மலிங்க ஆகியோர் சூப்பர் ஸ்டார்களாக மதிக்கப்படுகின்றார்கள்

2015-2022 வரை இங்கை அணி பாரிய வீழ்ச்சி ஒன்றை சந்திக்க நேர்ந்தது. விமர்சனங்கள் பழகிப் போகின. நக்கல்களும் நய்யாண்டிகளும் புடை சூழ்ந்தன. ஆம் இலங்கை அணியிடம் முறையான திட்டங்களோ வியூகங்களோ அடுத்த இடங்களை நிரப்புவதற்கு வீரர்களோ இல்லை. சிறந்த கட்டமைப்பை கொண்டு அணி ஒன்றை ஒன்றித்து செயற்பட தவறியிருந்தது இலங்கை அணி. அணித்தலைவர்களின் மாற்றம், அதிகமான வீரர்களின் வருகை, அனுபவ வீரர்களின் உபாதை போன்றவை பாரிய பங்களிப்பு செய்திருந்தது.

இதன் காரணமாக 2017 இல் சிம்பாவே தொடர் தோல்வி 2018இல் ஆசிய கிண்ணம் சூப்பர் 4விற்கு தகுதி இழந்தது இலங்கை அணி. தோல்விகள் பழகி வெற்றிகள் எட்டாக்கனி ஆகின.2019 உலக கிண்ணத்தின் பின் மிக்கி ஆதரின் வருகையின் பின்னர் இலங்கை அணியை ஒரு கட்டுக்கோப்புக்குள் வகைப்படுத்தினார். இளம் வீரர்களை அடையாளப்படுத்தி அடுத்த கட்ட நகர்வுகளுக்கு தயார்படுத்தினார். உடற்தகுதியை மைய்யப்படுத்தியே இவரது தெரிவுகளும் காணப்பட்ட்து. அனுபவ வீரர்களை வெளியில் வைத்து இளம் அணியை உருவாக்குவதை செயற்பட ஆரம்பித்தார். முதலில் விமர்சனத்திற்குட்படுத்தப்பட்டாலும் இன்று நிரூபனம் செய்யப்பட்டிருக்கிறது மிக்கியின் வியூகம்.

2021 இல் ஷானகவிற்கு அணித்தலைவர் என்ற அந்தஸ்தை உருவாக்கியது இலங்கை அணி. பழைய இலங்கை அணி போல் போராட்டம் வழங்ககூடிய வகையில் எதிராணிக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். ஷானக தான் சிறந்த தலைவர் என்று ஒவ்வொரு போட்டியிலும் தன்னை செதுக்கிக்கொண்டிருந்தார். கள வியூகம், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பந்து வீச்சாளர்களை தெரிவு செய்தல், பந்து வீச்சு சுழற்சி முறையை நேர்த்தியாக செய்தல் போன்றவற்றை சிறப்பாகவே வழிநடாத்தியிருந்தார்
2021 உலக கிண்ணத்திலும் இலங்கை அணி போராட்டத்துடனே காணபட்டது. அடுத்த உலக கிண்ணத்தில் இலங்கையின் மீது பார்வை தற்போது எழுந்துள்ளது. விளையாட்டு தவிர்த்து இலங்கையில் நடக்கும் விளையாட்டோ வேறு பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்ற நெருக்கடிகள் உள்ளது அவற்றையெல்லாம் தடை தாண்டியே இன்று வான் உயிர்ந்துள்ளது இலங்கை அணி

2022 ஆசிய கிண்ணத்தில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் படுமோசமாக தோல்வியுற்று விமர்சனத்திற்க்குட்படுத்தப்பாட்டிருந்தனர். ஷானகவும் சில்வர் வூடும் இனி நாங்கள் postive கிரிக்கெட்டினை ஆட இருக்கிறோம் என்று கூறினார். அவ்வாறே ஆரம்பித்தது இலங்கை அணியின் ஒவ்வொரு போட்டியும். ஒவ்வொரு வீரரும் தங்கள் ஓட்டங்களை 30+ உடன் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டிற்கு விளையாடி வந்தனர். ஷானக இலங்கை அணியின் துருப்புச் சீட்டாகவே காணப்பட்ட்டார். அவுஸ்திரெலியாவிற்கு எதிரான போட்டியில் ஷானக விளையாடிய ஆட்டம் அனைவரையும் மெச்சி எல்லோரின் ஆள் மனதிற்கும் குடி புகுந்தார். பானுக, ஹசரங்கவின் அதிகம் T20 போட்டிகள் விளையாடிய அனுபவம் மேலும் வலு சேர்த்தது.

பானுக இந்த ஆசிய கிண்ணத்தின் முடி சூடா கதாநாயகன் ஒவ்வரு போட்டியிலும் தன்னை யார் என்று நிரூபித்தார். பத்தும் நிசங்க தன்னிடம் போதிய அளவு பவர் இல்லை என்றாலும் தான் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரராக நிரூபத்திருக்கிறார். மகிஷ் தீக்ஷனாவின் பந்தும் சாமிகவின் பந்தும் இலங்கை அணியிற்க்கு மேலும் பலம் சேர்த்தது. இதன் விளைவாகவே இன்று பாக்கிஸ்தானுக்கு எதிராக இறுதி போட்டியில் வெற்றியீட்டி ஆசிய கிண்ணத்தை வெற்றியீட்டியிருக்கறது.170+ ஓட்டங்களை இலகுவாக துரத்தியடிக்கும் என்ற பார்வையயும் கட்டுக்கோப்பான பந்து வீச்சு மூலம் அணியை கட்டுப்படுத்தி இலகுவாக வீழ்த்த முடியும் என்றும் நிரூபித்துள்ளது. இந்த ஆசிய கிண்ணத்தில் ஒவ்வொரு வீரரின் பெயரும் பொறிக்கப்படுமளவிற்க்கே விளையாட்டு இருந்தது.அடுத்த இலக்கு இலக்கிண்ணம் வெல்வதே. அதற்கான தயார்படுத்தலில் மும்முரமாகவே உள்ளனர்.

இந்த ஆசியக் கிண்ணம் தகுதியடையவர்களின் கைகளுக்கே சென்றுள்ளது. அடுத்த உலக கிண்ணத்தையும் பெற்று மீண்டும் நம் கைகள் ஓங்க வாழ்த்துக்கள் ?? Dasun Shanaka And Co❤️

Congrats Lions❤️
#LionsRoar
#AsiaCup2022

✍️ Rihan