சாதனை படைத்தார் ரொனால்டோ.

உத்தியோகபூர்வ உதைபந்தாட்டப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்தார் ரொனால்டோ.

போத்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிரிஸ்ரியானோ ரொனால்டோ இத்தாலி சூப்பர் கோப்பா தொடரின் இறுதிப் போட்டியில் நப்போலி அணிக்கெதிராக பெற்ற கோலோடு, உத்தியோகபூர்வ போட்டிகளில் பெற்ற கோல்களின் எண்ணிக்கையை 760 ஆக உயர்த்தினார்.

இதற்கு முன்னர் செக் குடியரசின் ஜோசப் பிக்கொன் 759 கோல்களைப் பெற்று, அதிக உத்தியோகபூர்வ கோல்களைப் பெற்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

முன்னதாக 757 கோல்களைப் பெற்று இரண்டாமிடத்தில் நிலைத்திருந்த பிரேசில் ஜம்பவான் பீலேயும், மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ரொனால்டோ ரியல் மாட்ரிட் கழகத்திற்காக 450 கோல்களையும், மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்காக 118 கோல்களையும், ஜுவென்ரஸ் கழகத்திற்காக 85 கோல்களையும், ஸ்போட்டிங் கழகத்திற்காக 5 கோல்களையும் அடித்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.

சர்வதேசப் போட்டிகளில் 102 கோல்களை போர்த்துக்கல் அணிக்காக பெற்றுள்ள ரொனால்டோ, அவற்றில் 7 கோல்களை உலகக் கிண்ணப் போட்டிகளில் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

35 வயதான ரொனால்டோ இன்னும் எவ்வளவு காலம் உத்தியோகபூர்வ போட்டிகளில் ஆடுவார் என்பது கேள்விக்குறியே. மிகவும் சிறப்பாக உடற்தகுதியை பேணும் டொனால்டோ 40 வயது வரை ஆடி 1000 கோல்களைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சாதனைகளின் நாயகன் டொனால்டோவிற்கு விளையாட்டு. கொம்மின் வாழ்த்துக்கள்.

அன்புடன் Dr. Namasivayampillai Jeyaganeshan