சாமரி அதபத்துவின் சகலதுறை ஆட்டத்தால் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை.!

சாமரி அதபத்துவின் சகலதுறை ஆட்டத்தால் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை.!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று (6) இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இருப்பினும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியதுடன், முந்தைய இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தனர்.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சாமரி அதபத்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சாமரி அதபத்து இன்று தனது ஆறாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அவர் 85 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகள் அடங்கும்.

ஹர்ஷிதா மாதவி 75 ஓட்டங்களையும், கவீஷா தில்ஹாரி 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாத்திமா சனா மற்றும் அனம் அமீன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

261 என்ற வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணி 41.4 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான அலியா ரியாஸ் 56 ஓட்டங்களையும், ஒமைமா சொஹைல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஓஷதி ரணசிங்க மற்றும் சாமரி அதபத்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். துடுப்பாட்டம் மற்றும் பந்து இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணித்தலைவி சாமரி அதபத்து ஆட்டநாயகி விருதை தட்டிச் சென்றார்.

YouTube காணொளிகளுக்கு செல்லுங்கள் ?

புதிய உலக சாதனை நோக்கி நகரும் அர்ஜன்டீனா ..!

ச்ச்சின் மகனுக்கு கபில்தேவ் வழங்கிய ஆலோசனை ?

IPL ல் அதிக சிக்சர்கள் – RCB சாதனை ..!

French open சாம்பியனானார் நடால் ?