சாமிக, வெல்லாலகே கலக்கல்- அவுஸ்ரேலியாவை மிரள வைத்த இலங்கை..!

ஆஸ்திரேலியாவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என சமன் செய்த இலங்கை!

கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Toss வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

47.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி  9 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களுக்கு பெற்றபோது மழை குறுக்கிட்டது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 36, தசுன் ஷானக 34, துனித் வெல்லாலகே 20 ரன்கள் எடுத்தனர்.

பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைமூலமாக 216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 37.1 ஓவர்களில் 189 ரன்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர் (37), கிளென் மேக்ஸ்வெல் (30) பெற்றனர்.

பந்து வீச்சில் சாமிக்க கருணாரத்ன 3 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர, துனித் வெல்லலகே, தனஞ்செய டீ சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.போட்டியின் நாயகன் விருதை சாமிக்க கருணாரத்ன பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது. மீதமான 3 போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.