சாம்பியன்ஸ் டிராபியை வெல்லப்போகும் அணி?அதிக ரன்கள்,விக்கெட் எடுக்கப்போகும் பவுலர்? கிளார்க் கணிப்பு
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டாப் 8 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஒரு தவறுக்கு கூட எந்த ஒரு அணியும் இடம் கொடுக்கக் கூடாது. இந்த தொடரை அதிகபட்சமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா இரண்டு முறை வென்று இருக்கிறது.
இந்த சூழலில் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றுமா என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பையில் அதிக ரன்கள் எடுக்கப் போவது யார்? அதிக விக்கெட் எடுக்கப் போவது யார்? எந்த அணி வெல்லும் என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருக்கிறார்.
அது குறித்து தற்போது பார்க்கலாம். “என்னைக் கேட்டால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா தான் வெல்லும் என நினைக்கின்றேன். இதேபோன்று இந்த தொடரில் அதிக ரன்களை ரோகித் சர்மா தான் குவிக்கப் போகிறார். ஏனென்றால் தற்போது அவர் பார்ம்க்கு திரும்பி விட்டார். இதனால் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அதிகம் அவர் பார்முக்கு திரும்பியது மிகவும் நல்ல விஷயம்”.
“இந்திய அணிக்கு நிச்சயம் ரோகித் சர்மாவின் பங்கு தேவை. இதேபோன்று இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுக்கப் போவது இங்கிலாந்து ஜோப்ரா ஆர்ச்சராக தான் இருப்பார். இங்கிலாந்து அணி பெரிய அளவு இந்த தொடரில் ஜொலிக்காது என்றாலும், ஆர்ச்சர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கின்றார். எனவே அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும்”.
“எனவே ஜோப்ரா ஆர்ச்சர் தான் என்னுடைய சாய்ஸாக இருப்பார். இதேபோன்று சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் வெல்வார். அவரும் நல்ல பார்மில் இருக்கின்றார். டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் என அனைத்திலும் அவர் உடனடியாக விளையாடி வருகிறார். இலங்கை தொடரில் அவருக்கு ஓய்வு கிடைத்திருக்கிறது. எனவே அவர் நல்ல முறையில் சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராக இருப்பார். இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும். இதில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவ வாய்ப்பு இருக்கிறது” என்றும் கிளார்க் கூறியுள்ளார்.