சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது Chelsea

சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது Chelsea

2020/21 பருவகாலத்திற்கான சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்றை மீள எழுதி உள்ளது Chelsea அணி.
இன்று போர்த்துக்கல் இல் நடைபெற்ற இறுதி போட்டியில் Chelsea அணி 1-0 என்ற கோல் கணக்கில் Manchester City அணியை வீழ்த்தி கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.

 

Happy

இறுதி போட்டிக்கான கொண்டாட்ட நிகழ்வுகளுடன் ஆரம்பமான போட்டியில் ஆரம்பம் முதல் Chelsea ஆதிக்கம் செலுத்தியது. Timo Werner ஓரிரு அருமையான கோல் வாய்ப்புக்களை நழுவவிட்டார். அத்துடன் Chelsea இன் அனுபவம் வாய்ந்த வீரரான Thiago Silva காயம் காரணமாக வெளியேறினார். எனினும் தொடர்ந்து ஆக்ரோசம் காண்பித்த Chelsea அணிக்கு Kai Havertz 41ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் Chelsea அணி முன்னிலையை தக்க வைப்பதற்கும் Manchester City ஆட்டத்தை சமநிலைப்படுத்தவும் களமிறங்கின. இரண்டாம் பாதியின் நடுவில் Manchester City அணியின் தலைவர் Kevin De Bruyne காயம் காரணமாக வெளியேறினார்.

Manchester City தொடர்ந்து ஆட்டத்தை சமநிலைப்படுத்த போராடியது. ஆட்டத்தின் 76 ஆவது நிமிடத்தில் Man City இன் நட்சத்திர வீரர் Sergio Aguero களம் புகுந்தார். தொடர்ந்து Man City சமநிலை கோல் இற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி வந்தாலும் Chelsea வெற்றிகரமாக அம் முயற்சிகளை முறியடித்தது. இறுதியில் பரபரப்பான இறுதி நிமிடங்களை வெற்றிகரமாக கடந்து சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெற்றி கொண்டது Chelsea.BXAKn 

இவ் வெற்றியின் மூலம் 2012 ஐ போன்ற அநேக ஒற்றுமைகளுடன் 2021 இற்கான சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளது Chelsea அணி.

Chelsea அணியின் தலைமை பயிற்சியாளரான Thomas Tuchel போன வருடம் PSG அணியின் பயிற்சியாளராக சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் தோல்வியுற்றிருந்தார். எனினும் இம்முறை யாரும் எதிர்பாராத வகையில் Chelsea அணியை இறுதி போட்டிவரை அழைத்து வந்து வெற்றியும் அடைந்துள்ளார்.

Champions League இறுதி போட்டிகளில் முதல் முறையாக பங்கெடுத்த இறுதி 7 அணிகள் முதல் முயற்சியில் தோல்வியடைந்திருந்தன. அந்த வகையில் இம்முறை தனது முதல் இறுதி போட்டியை விளையாடிய Manchester City அணியும் அந்த வரிசையில் 8 ஆவதாக இணைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 3 சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் முதல் முறை இறுதி போட்டியில் பங்கெடுத்தவையாகும்.

2021 – Manchester City
2020 – Paris Saint German
2019 – Tottenham Hotspurs

இன்றைய இறுதி போட்டியில் விளையாடியதன் மூலம் Champions League இறுதி போட்டியில் விளையாடிய முதல் ஆபிரிக்க கோல் காப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் Chelsea அணியின் கோல் காப்பாளர் Senegal நாட்டை சேர்ந்த Edouard Mendy.

 

 

Chelsea வெற்றி கொண்டாட்டம் புகைப்பட தொகுப்பு.