சாம்பியன் மகுடம் சூடியது இந்தியா..!

கொழும்பில் நடந்த SAFF 17 வயதுக்குட்பட்டோருக்்கான இறுதி ஆட்டத்தில் 10 பேர் கொண்ட நேபாளத்தை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், நடப்பு சாம்பியனான இந்தியா தனது SAFF U-17 சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்து சாதனை படைத்தது.

போபி சிங், கொரூ சிங், கேப்டன் வன்லால்பெகா கிட் மற்றும் அமன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவின் அபார வெற்றிக்கு வழிவகுத்தனர்.

குரூப் லீக்கில் நேபாளம் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்திய நிலையில் இந்தியா இறுதிப்போட்டியில் பழிதீர்த்துள்ளது.