கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் மாற்றம் நிகழப்போகிறது.
எதிர்வரும் 29 ம் திகதி மான்செஸ்டர் சிட்டி மற்றும் செல்சி அணிகளுக்கிடையில் இந்த இறுதி போட்டி திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
ஆயினும் கொரோனா அச்ச நிலைமை காரணமாக இந்த இறுதி போட்டி இஸ்தான்புல்லிலிருந்து போர்டோவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி இஸ்தான்புல்லின் அட்டதுர்க் ஒலிம்பிக் மைதானத்தில் முன்னர் திட்டமிடப்பட்டது .
துருக்கி ,கடந்த வாரம் பிரிட்டனை பயண ‘சிவப்பு பட்டியலில்’ (Red List ) வைத்தது, இதனால் இங்கிலாந்து ரசிகர்களுக்கு போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலைமை உருவானது.
இதனாலேயே போட்டி போர்டோவின் எஸ்டாடியோ டோ டிராகோவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6000 ரசிகர்கள் வரை போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.