சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மகுடம் சூடியது ரியல் மாட்ரிட்..!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மகுடம் சூடியது ரியல் மாட்ரிட்..!

கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்து மிகப் பெரிய கால்பந்து திருவிழாவான சாம்பியன் லீக் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

பிரான்சின் தலைநகர் பாரிசில் நடந்த மிகப்பெரிய விறுவிறுப்பான ஒரு தொடரில் கரிம் பென்சிமா தலைமையில் ரியல் மேட்ரிட் கால்பந்தாட்ட கழகம் மிக அற்புதமான வெற்றியைத் தனதாக்கியது.

வெனிசியஸ் ஜூனியர் அடித்த இன்றைய கோலின் மூலம் 1-0 எனும் அடிப்படையில் ரியல் மேட்ரிட் இந்த போட்டியில் வெற்றியை பெற்றது.

ஆரம்பம் முதலே இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கழகமான லிவர்பூல் கழகம் தொடர்ச்சியான ஆதிக்கத்தை மேற்கொண்டு வந்தாலும்கூட அதனை ரியல் மாட்ரிட் கழகத்தினுடைய கோல் காப்பாளர் அத்தனை வாய்ப்புகளையும் முறியடித்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .

 

இறுதியில் தமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பில் ரியல் மேட்ரிட் கழகம் 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

ரியல் மாட்ரிட் கழகத்தை பொறுத்தவரை சாம்பியன் லீக்  கால்பந்தாட்ட வரலாற்றில் 14 தடவையாக சாம்பியன் லீக் கால்பந்து மகுடத்தை சூடியது என்பது சுட்டிக்காட்டதக்கது.

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் இறுதியாக ரியல் மேட்ரிட் கழகம் எட்டு தடவை முன்னேறிய சந்தர்ப்பங்கள் அத்தனையிலும் கிண்ணத்தை சுவீகரித்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரியல் மேட்ரிட் கழகத்தினுடைய கோல் காப்பாளர் Courtois மொத்தமாக ஒன்பது வாய்ப்புகளை இன்று முறியடித்தார் .

சாம்பியன் லீக் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி வரலாற்றில் இவ்வாறு அதிக கோல்களை தடுத்த கோல் காப்பாளர் என்ற பெருமையும் ரியல் மாட்ரிட் கோல் காப்பாளர் courtois பெற்றார்.

இந்த பருவ காலத்தில் ஸ்பானிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடரின் சாம்பியன் மகுடத்தை சூடிய ரியல் மேட்ரிட் கழகம், இப்போது சாம்பியன் லீக் கால்பந்தாட்ட தொடரின் சாம்பியனாகவும் தேர்வு செய்யப்பட்டவை சுட்டிக்காட்டத்தக்கது .

??✅ R16: Real Madrid vs PSG (3-2)
???????✅ QF: Real Madrid vs Chelsea (5-4)
???????✅ SF: Real Madrid vs Man City (6-5)
???????✅ F: Real Madrid vs Liverpool (1-0)
?✅ One of the greatest Champions League runs of all-time.

வாழ்த்துக்கள் ?

 

YouTube link ?