சாம்பியன் லீக் கிண்ணம் வென்றது பார்சிலோனா -வரலாற்றில் மகத்தான சாதனை ..!

கால்பந்து ரசிகர்களின் பெரு விருப்புக்குரிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய இறுதி போட்டியில் பார்சிலோனா மகளிர் அணி சாம்பியன் மகுடம் சூடிக்கொண்டது.

செல்சி மகளிர் அணிக்கெதிரான நேற்றைய இறுதி போட்டியில் பார்சிலோனா மகளிர் அணி 4-0 என்று அசத்தல் வெற்றி பெற்றது.

போட்டி ஆரம்பித்து முதலாவது நிமிடத்திலேயே செல்சி அணி வீராங்கனையாலேயே Own goal அடிப்படையில் முதல் கோல் பார்சிலோனாவுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முதல் பாதி நிறைவுக்கு வருவதற்குள்ளேயே பார்சிலோனா மகளிர் அணி 4 கோல்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது.

 

 

 

 

 

 

இறுதியில் 4-0  எனும் அடிப்படையில் பார்சிலோனா மகளிர் அணி சாம்பியன் லீக் மகுடத்தை தனதாக்கியது, இதன் மூலமாக சாம்பியன் லீக் வரலாற்றிலேயே ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலும் சாம்பியன் மகுடத்தை சூடிய ஒரே அணியாக பார்சிலோனா அணி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.