சாய் சுதர்சன்- ஒரு நாயகன் உதயமாகிறான். 👌

2023 IPLல அட்டகாசம் பண்ணான். Finalல சென்னைக்கு எதிரா 96 அடிச்சான்.

அந்த வருசமே Decemberல சவுத் ஆப்ரிக்கா ODIல கூட்டீட்டு போனாங்க. அங்க 2 Fifty அடிச்சான். (62, 55).

அதுக்கு அடுத்த வருசம் T20 debut ஆனான். Zimbabwe டூருக்கு கூட்டீட்டு போனாங்க. அங்க ஆடன மேட்ச்ல batting கிடைக்கல.

அதுக்கடுத்த வருசம் 2025ல பல awardகளை வாங்கிக்குவிச்சான்.
உடனடியா TEST ல debut ஆகீருக்கான். 👌👏

ஒவ்வொரு வருசமும் , ஒவ்வொருதடவையும் managementஐ disturb பண்ணீட்டே இருந்திருக்கான் தன் performance மூலமாக.

ஆடற ஆட்டத்தை பாத்தும் , இருக்கற form பாத்தும் இவன miss பண்ணா நமக்குதான் நஷ்டம்னு 5 மேட்ச் Test க்கு இங்கிலாந்துக்கு கூட்டீட்டு போறாங்க இந்தியா. 🔥

எப்படியும் உள்ள பூந்துருவான், Slot கிடைச்சுரும். Test ஆடீருவான். இனி இவன் All format Player.

நம்ம ஊர்ல இருந்து ஒருத்தன் விடாம ஆடி எல்லா format லயும் நுழைஞ்சிருக்கான். 👏👏

சாய் சுதர்சன் ஒரு நாயகன் உதயமாகிறான். 👌👏💐

✍️ Arun Kumar G

Previous articleஇந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது;
Next articleசிங்காரவேலு சசிகுமார் ஓய்வுபெறுகிறார்.