சாஸ்திரியின் இடம் டிராவிட்டுக்கும், டிராவிட் இடத்தில் லக்ஷ்மன் -இந்திய கிரிக்கெட்டில் வரும் மிகப்பெரும் மாற்றம் …!

சாஸ்திரியின் இடம் டிராவிட்டுக்கும், டிராவிட் இடத்தில் லக்ஷ்மன் -இந்திய கிரிக்கெட்டில் வரும் மிகப்பெரும் மாற்றம் …!

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவது இப்போதைய நிலையில் உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியின்பதவி காலம் தற்போது நடைபெற்றுவரும் இருபது-20 உலக கிண்ணத் தொடருடன் நிறைவுக்கு வருகிறது.

இந்த நிலையில் 2023 உலகக்கிண்ண போட்டிகள் வரையில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் செய்யப்படுவார் என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன, இப்போது அதற்கான விண்ணப்பத்தை டிராவிட் தாக்கல் செய்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இதே நேரத்தில் NCA என்று சொல்லப்படுகின்ற தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக டிராவிட் செயலாற்றுவதால் அவருடைய தலைமைத்துவம் முன்னாள் வீரர் லக்ஷ்மனுக்கு ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஆக மொத்தத்தில் சாஸ்திரியின் இடம் டிராவிட்டிடமும், திராவிட பதவி லக்ஷ்மனுக்கும் வரப்போகிறது என்பதிலே ரசிகர்கள் மீண்டும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள், இத்தோடு மாத்திரமல்லாமல் கணீர் குரலில் ரவி சாஸ்த்ரியின் வர்ணனைகளை நாம் கேட்க்கும் காலமும் தொலைவில் இல்லை எனலாம்.