சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்தியா- திடீரென அணியை மாற்றிக்கொள்ள ஆலோசிக்கிறது…!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் நாணய சுழற்சி செய்வதற்கு சற்று முன்னதாக இந்தியா தங்களது விளையாடும் பதினொருவர் அணியை மாற்றக்கூடும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து வெளியிட்டுள்ளார் .

வர்ணனை கடமைகளுக்காக தற்போது சவுத்தாம்ப்டனில் இருக்கும் முன்னாள் இந்திய தலைவர் கவாஸ்கர், அங்குள்ள சீரற்ற வானிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக உள்ளது, இது மேலதிகமாக பேட்ஸ்மேனை சேர்க்க இந்தியாவைத் தூண்டக்கூடும் என்றார்.

வியாழக்கிழமை மாலை இந்தியா தங்களது விளையாடும் பதினொருவர் அணியை அறிவித்தது, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மறுபுறம், நியூசிலாந்து இதுவரை தமது இறுதி பதினொருவர் அணியை இதுவரை அறிவிக்கவில்லை என்பது முக்கியமானது, இந்த நிலையில் இரு சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, மேலதிகமாக ஒரு துடுப்பாட்ட வீரராக ஹனுமா விஹாரியையோ அல்லது வேகப்பந்து வீச்சாளராக சிராஜையோ அணிக்கு கொண்டுவரலாம் என்று நம்பபடுகின்றது.

இதேமாதிரியான கருத்தை பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதரும் தெரிவித்துள்ளார், அதாவது அவரது கருத்துக் பிரகாரம் Toss போடப்படுவதற்கு முன்னர் தேவையாக இருந்தால் நாம் அணியை மாற்ற முயற்சிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே இது இந்தியாவுக்கு தலையிடியைக் கொடுத்திருக்கிறது, என்ன நடக்கும் என்பது நாளை போட்டி ஆரம்பிக்கையிலேயே அறிந்துகொள்ள கூடியதாகவிருக்கும் என்பதே முக்கியமானது.