டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் மும்பை பந்து வீச்சாளர்கள் மெதுவாக பந்து வீசியதாக ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற டெல்லி அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது .
IPL போட்டி தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 ல் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.