சிக்சருக்கு 12 ஓட்டங்கள்- IPL இல் புதிய விதிமுறை..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கெவின் பீட்டர்சன் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான புதிய விதிமுறை ஒன்றைப்பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

T20 போட்டிகளில் சிக்ஸர்கள் விளாசப்படும் போது வளமையிலேயே 6 ஓட்டங்கள் வழங்கப்படும், ஆனால் சிக்ஸர்கள் விரட்டப்படும் தூரத்தை வைத்துக்கொண்டு ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பீட்டர்சன் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக 100 M க்கு மேல் விளாசப்படும் சிக்ஸர்களுக்கு 12 ஓட்டங்கள் வழங்கப்படவேண்டும் எனும் கருத்தை முன்வைத்துள்ளார். இனிவரும் நாட்களில் இருபதுக்கு இருபது போட்டிகளில் இவை கவனிக்கப்படுமா எனவும் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

IPL போட்டிகளில் இப்படியான விதிமுறைகள் வந்தாலும் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்..!