சிக்ஸர் அடித்து தன் காரையையே உடைத்த அதிசய வீரன்- வைரலாகும் வீடியோ ..!

கிரிக்கெட்டில் சோக்சர் அடிப்பது என்பது எல்லோருக்கும் கொண்டாட்டமானது, ஆனால் கொண்டாடாமல் திண்டாடுவது என்பது வேடிக்கைதான்.

ஆமாம், அப்படி சிக்ஸர் அடித்த வீரர் ஒருவர் அதனை கொண்டாடாமல் , கவலைப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் UK யில் உள்ள இலிங்வொர்த் செயின்ட் மேரியின் கிரிக்கெட் கிளப் சம்பந்தப்பட்ட கிளப் கிரிக்கெட் விளையாட்டில் நடந்ததாக அறியவருகின்றது.

கிளப்பின் ஊடக பிரிவால் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், துடுப்பாட்ட வீரர் லெக் சைடில் ஒரு பெரிய ஷாட் விளையாடி பந்தை சிக்சருக்கு அனுப்புகிறார்.

அவர் அடித்த ஷாட் பேட்ஸ்மேனின் சொந்த காரில் வாகன நிறுத்துமிடத்தில் தரையிறங்கியது, காரின் விண்ட்ஸ்கிரீனை உடைத்ததுதான் இங்கே வேடிக்கையானது.

வீடியோவை பாருங்கள் மக்களே.