சிங்காரவேலு சசிகுமார் ஓய்வுபெறுகிறார்.

திரு.சிங்காரவேலு சசிகுமார்
—————————————-
திரு.சி.சசிகுமார் ஆசிரியர் அவர்கள் அரசசேவையிலிருந்து 8.6.2025 இல் ஓய்வு பெறுகின்றார்.38 ஆண்டுகளாக
அர‌ச சேவையிலிருந்து உற்சாகமாக பணி புரிந்த திரு.சி.சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

இ.கி.ச.ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்
கல்லூரியின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு
உயர்ந்த அளவில் பங்களிப்பு செய்தவர். ஜனாப்.பஸீர் அமீர் ஆசிரியர் அவர்களுடன் இணைந்து இல்ல
மெய்வல்லுனர் போட்டிகளையும்,
தேசிய பாடசாலைத்தின வீதியோட்டப்
போட்டிகளையும், கல்லூரித்தின சைக்கிள் ஓட்டப் போட்டிகளையும், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்துடனான மாபெரும் கிரிக்கட்
சமர்களையும் பல வருடங்களாக வெற்றிகரமாக நடாத்தியவர்.

சாரணீய செயற்பாடுகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்.
திரு.செ.பத்மசீலன் , திரு.சு.பரமேஸ்வரன் ஆகிய சாரண பொறுப்பாசிரியர்களோடு இணைந்து கல்லூரியில் தனது காலம் காலம் வரையில் 23 ஜனாதிபதி சாரணர்களை உருவாக்கியவர். சாரணீயத்தில் படிப்படியாக உயர்ந்து இன்று மாவட்ட சாரண ஆணையாளராக வளர்ந்து நிற்கின்றார். பாராட்டுகின்றோம்.

ஊடகத்துறையிலும் கால் பதித்தார். கல்லூரியின் முன்னாள் இந்நாள் ஆசிரியர்களின் சுகதுக்க செய்திகளை
அன்றாடம் தந்து கொண்டிருப்பார்.
தான் பொறுப்பெடுக்கின்ற எந்த
விடயமாயினும் அதனை திட்டமிட்டு
நேர்த்தியாக நிறைவேற்றும் ஆற்றலை
நான் இவரிடம் கண்டிருக்கிறேன்.
பிடிவாதமும் உண்டு.

1987ல் இளைஞர் சேவை அலுவலராக அரச சேவைக்குள் நுழைந்து 1992ல் இந்துக்கல்லூரியில் ஆசிரியரக நியமனம் பெற்று 29 ஆண்டுகள் பணியாற்றி2021 ல் புனித சூசையப்பர் கல்லூரிக்கு மாற்றலாகி 8.6.2025ல் ஓய்வு பெறுகின்றார்.

38 வருடங்களாக களைப்பில்லாமல், சோர்வில்லாமல் நிறைவாக தனது சேவையை ஆற்றியுள்ள
திரு.சி.சசிகுமார் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
உண்மையான சேவையாளர்களை
வேண்டி நிற்கின்ற சமூகத்திற்கு திரு.சசிகுமாரை போன்றவர்கள்
அவசியமாகத் தேவைப்படுவார்கள்.

வாழ்க. வளர்க.

சி.தண்டாயுதபாணி
முன்னாள் அதிபர்
ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

விளையாட்டு.Com சார்பில் நாமும் வாழ்த்துகிறோம் 🙏

Previous articleசாய் சுதர்சன்- ஒரு நாயகன் உதயமாகிறான். 👌
Next articleBan க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.