சிராஜ்ஜை சீண்டிப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள், பிளாஸ்டிக் பந்தை எறிய சிராஜ் கொடுத்த பதிலடி..(வீடியோ)

சிராஜ்ஜை சீண்டிப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள், பிளாஸ்டிக் பந்தை எறிய சிராஜ் கொடுத்த பதிலடி..(வீடியோ)

 இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி அணி 78 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் நாளில் விக்கட் இழப்பின்றி 120 ஓட்டங்களை பெற்று போட்டியில் அபாரமாக நிலையில் காணப்படுகிறது.

இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது எல்லைக்கோட்டருகே களத்தடுப்பில்  ஈடுபட்டிருந்த சிராஜ் மீது ரசிகர்கள் சிகப்பு நிறத்திலான பிளாஸ்டிக் பந்து ஒன்றை வீசினர் ,அதனைத் தொடர்ந்து சில ரசிகர்கள் கூச்சலிட்டு அவரை சீண்டிப் பார்ந்தனர்.

எல்லைக்கோட்டருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தும் அவர் மீது ரசிகர்கள் வேண்டுமென்றே கோபத்தை வெளிப்படுத்தினர்.

ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த அதற்கு சிராஜ் ஒரு வேடிக்கையான சைகை காட்டியமையும் சுட்டிக்காட்டதக்கது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. தனது கைகளால் 1-0 என சைகை காட்டினார். (இந்தியா தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது)

லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து ரசிகர்கள் லோகேஷ் ராகுலுக்கு தண்ணீர் போத்தல்களை எறிந்தமையும் குறிப்பிடத்தக்கது.