சிறுவனின் மனதைக் கொள்ளைகொண்ட டேவிட் வோர்னர்-நெகிழ்ச்சியான சம்பவம் (வீடியோ இணைப்பு)

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இங்கிலாந்து டாஸ் வென்று ஆஸ்திரேலியாவுக்கு முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை வழங்கியது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் மழையால் பலமுறை தடைபட்டதால், ஆஸ்திரேலிய இன்னிங்ஸை 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 269 ரன்கள் சேர்த்தனர்.

இது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 9வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.

அபாரமாக ஆடிய ஹெட் 130 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 152 ரன்கள் குவித்தார். வார்னர் 102 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும்.

டேவிட் வார்னர் ஆட்டமிழந்த பிறகு மைதானத்திற்குத் திரும்பியபோது, ​​பார்வையாளர்களில் ஒரு சிறு குழந்தைக்கு தனது கையுறைகளைக் கொடுத்து மகிழ்வித்தார்.

வோர்னரிடமிருந்து கையுறையைப் பெற்றுக்கொண்ட அந்த சிறுவன் மகிழ்ச்சி தாங்க முடியாது ஓடிச் சென்று அதனை தன்னுடைய தாயாரிடமும் சகோதரரிடமும் காண்பித்த போது அங்கே நிகழ்ந்த சம்பவங்கள்  மனதை கவர்ந்தவை ஆகியிருந்தன.

சமூகவலைத்தளங்களில் இந்த விடயம் அதிகமாக இன்று பகிரப்பட்டது.

காணொளியை பாருங்கள் 👇

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇