சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ள எம்சிசி

மண்கட் விதிமுறை அதிகாரப்பூர்வமானது – மேலும் சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ள எம்சிசி

கிரிக்கெட் போட்டியை நிர்வாகிக்கும் அனைத்து உரிமையும் ஐசிசி நிர்வாகத்திடம் உள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் உள்ள ஒரு சில சட்ட திட்டங்களை மாற்றி அமைக்கும் உரிமை லண்டனில் உள்ள மரில்போன் கிரிக்கெட் கிளப்பிடம் உள்ளது. தற்பொழுது அந்த கிரிக்கெட்டில் ஒரு சில சட்ட திருத்தங்களை கிரிக்கெட் போட்டியில் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத் திட்டங்கள் என்னவென்று தற்பொழுது விரிவாக பார்ப்போம்.

1. பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தக் கூடாது

பொதுவாக கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர் அதிக அளவில் முன்பு உமிழ்நீரை பயன்படுத்துவார். அவ்வாறு உமிழ்நீரை பயன்படுத்தி பந்தை ஸ்விங் அவர்கள் நினைத்தவாறு ஸ்விங் செய்வார்கள். ஆனால் இனி கிரிக்கெட் போட்டியில் எந்த ஒரு வீரரும் உமிழ் நீரை பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2. புதிய பேட்ஸ்மேன் தான் ஸ்டிரைக்கில் வரவேண்டும்

ஸ்டிரைக்கில் உள்ள ஒரு பேட்ஸ்மேன் பந்தை தூக்கி மேலே அடித்த பின்னர் அதை எதிரணி வீரர்கள் நிச்சயமாக கேட்ச் பிடிக்க போகிறார்கள் என்பதை உணர்ந்து எதிர்முனைக்கு ஓடி செல்வார். எதிர்முனையில் இருக்கும் நான் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேனும் ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக் கொள்ள ஸ்டிரைக்கை நோக்கி ஓடி வருவார். இவ்வாறு செய்கையில் ஸ்டிரைக்கில் இருந்த பேட்ஸ்மேன் அவுட் ஆனாலும் நான் ஸ்ட்ரைக்கில் இருந்த பேட்ஸ்மேன் ஸ்டிரைக்கை தக்க வைத்துக்கொள்வார்.

ஆனால் இனி ஸ்டிக்கில் உள்ள பேட்ஸ்மேன் கேட்ச் முறைப்படி அவுட் ஆனாலும், புதிய பேட்ஸ்மேன் தான் ஸ்ட்ரைக்கில் நின்று விளையாட வேண்டும். ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக் கொள்ள நான் ஸ்ட்ரைக்கில் உள்ள பேட்ஸ்மேன் ஓடி வந்தாலும் இனி எந்தவித பயனும் இல்லை.

3. இனி டெட் பால் கிடையாது

பந்து வீச்சாளர் பந்து வீச ஓடி வரும் பொழுது திடீரென ஒரு வீரர் தனது பீல்டிங் பொசிஷனில் இருந்து சற்று தள்ளி வந்துவிட்டால் அந்த பந்தை நடுவர் டெட்பால் என்று அறிவிப்பார். ஆனால் இனி பீல்டிங் செய்து கொண்டிருக்கும் வீரர் தவறுதலாக தன் பொசிஷனில் இருந்து நகர்ந்து விட்டால், பெனால்டியாக 5 ரன்கள் எதிரணிக்கு கொடுக்கப்படும்.

4. மண்கட் விதிமுறை அதிகாரப்பூர்வமானது

பந்து வீச்சாளர் ஓடி வந்து பந்தை வீசுவதற்கு முன்பாகவே நான் ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கில் இருந்து ஒரு சில அடிகள் முன்னேறிச் செல்லும்பொழுது, பந்துவீச்சாளரால் தந்திரமாக தனது பந்து வீச்சை நிறுத்தி அந்த பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய முடியும். இதற்கு மண்கட் விதிமுறை என்று பெயர்.

பல்வேறு முறை இது நடந்திருக்கிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒருமுறை ஜோஸ் பட்லரை இந்த முறையில் அவுட் ஆக்கினார். அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. கிரிக்கெட் நடைமுறை பொடி இது தவறானது என்று பல்வேறு விவாதங்கள் வந்தன.
ஆனால் இனி அந்த விவாதங்கள் நடைபெற அவசியமில்லை. ஏனென்றால் எம் சி சி மண் கட் விதிமுறையை அதிகாரப்பூர்வ மாற்றியுள்ளது.

5. ஆட்டத்தில் ஏற்படும் இடையூறு

ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் திடீரென மைதானத்தில் எதிர்பாராவிதமாக ரசிகர்கள், விலங்குகள் அல்லது ஏதேனும் ஒரு முறையில் ஆட்டத்தில் இடையூறு ஏற்படும். இது ஏதாவது ஒரு போட்டியில் வழக்கமாக நடைபெறும். இனி அவ்வாறு நடைபெற்றால் அந்த குறிப்பிட்ட நொடியில் வீசிய பந்தை டெட்பால் என்று நடுவர்கள் அறிவிப்பார்கள்.

#Abdh