சீசனில் 10வது முறையாக மும்பை இந்தியன்ஸ் தோல்வி …!

இந்த சீசனில் 10வது முறையாக மும்பை இந்தியன்ஸ் தோல்வி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி,

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2022 பதிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிப் போட்டியை நெருங்கி வருகிறது.

இதனிடையே, இன்று(17) நடைபெற்ற 65வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ராகுல் திரிபாதி 46 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். பிரியம் கார்க் 42 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 38 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் ரமன்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

194 என்ற வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இஷான் கிஷான் 46 ரன்கள் எடுத்து 43 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 வெற்றிகளை பெற்று இருக்கின்ற நிலையில், இறுதி இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 10 தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரைக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதை கவனிக்கத்தக்கது.

அடுத்து 14 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தோற்கடிக்குமாக இருந்தால் ஆர்சிபி அணி play off செல்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகலாம் என நம்பப்படுகிறது.

டெல்லி அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிக்குமாக இருந்தால் நான்காவது அணியாக டெல்லி அணியே play off செல்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது.

You Tube link ?

புள்ளி பட்டியல் கீழே ?

? IPL