சுதந்திர கிண்ண கால்பந்து-வடக்கு, கிழக்கு ஆட்டம் சமனிலையில் நிறைவு..(புகைப்படங்கள் இணைப்பு)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் மாகாணங்களுக்கு இடையேயான சுதந்திர கிண்ண லீக் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் வடக்கு மாகாண தெரிவு அணி மற்றும் கிழக்கு மாகாண தெரிவு அணிகள் மோதின.
ஆட்டநேரமுடிவில் இரு அணிகளும் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் எதுவித கோல்கள் இன்றி போட்டி சமனிலையில் முடிவுற்றது.
இந்த தொடரின் 5 வது போட்டியில் 4 வது சமனிலை முடிவைப்பெற்றது
கிழக்கு மாகாணம், 5 ஆட்டங்கள் நிறைவிலும் தொடர்ந்தும் வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண அணிகள் சம புள்ளிகள் பெற்றுள்ளன, ஆயினும் இன்றைய சப்ரகமுவ அணியின் வெற்றியானது கோல் புள்ளி அடிப்படையில் வடக்கு மாகாண அணியை 2ம் நிலைக்கு தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடரில் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது போட்டி நிபந்தனையாகும்.
அந்தவகையில் அரையிறுதியில் மோதும் அணிகளின் சொந்த மைதானத்தில் ஒர் அரையிறுதியாட்டமும், எதிரணி மைதானத்தில் ஒர் அரையிறுதியாட்டமுமாக இவ் அரையிறுதியாட்டங்கள் ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
ஒர் அணிக்கு இரு அரையிறுதி போட்டி வாய்புடன் 4 அரையிறுதி ஆட்டங்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வட மாகாண அணி அரை இறுதியை நோக்கியுள்ள நிலையில் யாழ் மண்ணில் ஒர் அரையிறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றமையும் முக்கியமானது.