சுனில் நரையனிடம் வீழ்ந்தது RCB, கோலி,வில்லியர்ஸ் கூட்டணி மீண்டும் ரசிகர்களை ஏமாற்றியது..!

 முன்னர் உலகக் கோப்பைப் போட்டிகள், ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் சிறப்பாக ஆடி கடைசி ேநரத்தில் கோட்டைவிடுவார்கள். அதனால்தான் அவர்கள் கிரிக்கெட் அரங்கில் சோக்கர்ஸ்(chokers) என்று அழைக்கப்படுகின்றனர். இதை அந்த அணியின் முன்னாள் வீரர் ஹரி கிறிஸ்டனே வெளிப்படையாக தெரிவித்தார். அதுபோலவே ஆர்சிபி அணியும் இப்போது சோக்கர்ஸாக மாறிவிட்டது.


சுனில் நரேனின் அற்புதமான பந்துவீச்சு, சூழலுக்கு தகுந்தார்போல் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஆர்சிபிஅணியில் கோலி அடித்த 39 ரன்கள்தான் அதிகபட்சம். மற்ற வீரர்களான படிக்கல்(21), பரத்(9), மேக்ஸ்வெல்(15), ஏபிடி(11)ஷாபாஸ்(13), கிறிஸ்டியன்(9) ரன்கள் சேர்த்தனர். 88 ரன்களுக்கு2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆர்சிபி அணி அடுத்த 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக கடைசி 34 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி அணி.

139 ரன்கள் சேர்த்தால் ெவற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ்(26), கில்(29) நல்ல தொடக்கம் அளித்தனர். இதை ரன் வேகத்தைஅடுத்தடுத்து வந்த பேட்ஸமேன்கள் பயன்படுத்தி இருந்தால் ஆட்டம் 15 ஓவர்களில் முடிந்திருக்கும்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கிறிஸ்டியன் ஓவரில் சஹிப் அல் ஹசன் ஒரு பவுண்டரி அடித்தபோதே ஆட்டம் முடிந்துவிட்டது, அடுத்த 3 ரன்களை எளிதாக எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து வந்தனர்.

ஆர்சிபி அணியில்ஆ றுதல் அளிக்கக்கூடியது ஹர்சல் படேல் இந்த சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி கடந்த 2013ம் ஆண்டு பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். சஹல் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் சுற்றி்ல் ஃபார்மில் இல்லாத சஹல் 2-வது சுற்றில் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார். சிராஜ் 4 ஓவர்கள்வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் 2-வது தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி. இதில் வெல்லும் அணி ஃபைனலில் சிஎஸ்கே அணியுடன் கோப்பைக்கான மோதலில் 15 ம் திகதி ஈடுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.