சுரேஷ் ரெய்னாவை ஏன் சென்னை அணி சேர்க்கவில்லை தெரியுமா -சென்னை அணியின் CEO தெளிவான விளக்கம்..!

சுரேஷ் ரெய்னாவை ஏன் சென்னை அணி சேர்க்கவில்லை தெரியுமா -சென்னை அணியின் CEO தெளிவான விளக்கம்..!

கடந்த இரு தினங்களாக பெங்களூரில் இடம்பெற்ற IPL போட்டிகளின் ஏலத்தின் அடிப்படையில் எல்லா அணிகளும் தமது இறுதி அணிகளை உறுதிப்படுத்தியுள்ளன.

சென்னை அணியும் தமக்கான 25 வீரர்களையும் இறுதிப்படுத்தினாலும் கூட சென்னை அணி, அவர்களது முக்கிய வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவை அணியில் சேர்க்க மறுத்தமை எல்லோருக்கும் ஆச்சரியத்தை தோற்றுவித்துள்ளது.

‘சின்ன தல’ என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவின் அடிப்படை விலையான 2 கோடி ரூபாவுக்கு எந்த அணியும் அவரை ஏலத்தில் வாங்க முன்வரவில்லை, சென்னை அணிகூட இவரை அணிக்கு இணைக்க முயற்சிக்காமை ரசிகர்களுக்கு பலத்த கவலையை தோற்றுவித்தது.

இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன் இதுதொடர்பிலான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

“ரெய்னா ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒரு நிலையான செயல்திறன் வீரராக இருந்து வருகிறார், அவரை நமது சென்னை அணியில் கொண்டிருக்காமல் இருப்பது மிகவும் கடினமாக இருந்தது,

அதே நேரத்தில் அணி சேர்க்கை, வடிவம் மற்றும் அணி விரும்பும் வகையைப் பொறுத்தது & ரெய்னாவை அணிக்கு இணைக்காமைக்கும் , பொருந்தாததற்கு இதுவும் ஒரு காரணம்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

2008 முதல் சென்னை அணியில் பங்களிப்பு செய்த ரெய்னாவின் பங்களிப்பு சென்னை அணிக்கு இல்லாமை ஒட்டுமொத்த IPL ரசிகர்களுக்கும் கவலையானதே.