சூப்பர் ஸ்மேஷ்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த போல்ட் (வீடியோ இணைப்பு )

சூப்பர் ஸ்மேஷ்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த போல்ட் (வீடியோ இணைப்பு )

நியூசிலாந்தின் உள்ளூர் டி20 தொடரான சூப்பர் ஸ்மேஷ் லீக் ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 11ஆவது போட்டியில் நார்த்தன் நைட்ஸ் -கேன்டர்பரி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நார்த்தன் நைட்ஸ் அணி பந்துவீச தீர்மானிதது.

அதன்படி களமிறங்கிய கேண்டர்பரி அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ஹென்றி நிக்கோலஸ் மட்டும் நிலைத்து விளையாடி 35 ரன்களைச் சேர்த்தார்

இதனால் 17.2 ஓவர்களில் கேண்டர்பரி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களை மட்டுமே சேர்த்தது. நார்த்தன் நைட்ஸ் அணி தரப்பில் ஜோ வால்கர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய நார்த்தன் வாரியர்ஸ் அணியும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் கடைசி பந்தில் அந்த அணி வெற்றிபெற 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.

அதனை எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர் ட்ண்ட் போல்ட், லாவகமாக சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் நார்த்தன் வாரியர்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தியல் கேண்டர்பரி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

#Abdh